செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் செல் போனை பிடுங்கிய தல?

ஒரு வழியாக பல்வேறு சலசலபிற்கிடையே தமிழ்நாடு சட்ட சபை தேர்தலுக்கான ஒட்டு பதிவு நேற்று அமைதியுடன் நிறைவு பெற்றது.

எனினும், நேற்று பல்வேறு சர்ச்சைகள் கிளம்ப தான் செய்தது.
அதில் ஒன்று தான், செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் செல் போனை அஜித் பிடுங்கியதாக வந்த செய்தி.

என்ன தான் நடந்தது அங்கே ?

ரசிகர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டி முதல் ஆளாக தனது வாக்கு சாவடிக்கு வருகை தந்தார் நடிகர் அஜித்.
எனினும், அவரை காண அங்கே ரசிகர்கள் காலை முதலே கூடிய வண்ணம் இருந்தனர். அஜித் காரை விட்டு இறங்கியது தான் தாமதம் உடனே ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்கவும், வீடியோ எடுக்கவும் என அந்த இடமே பரபரப்பு ஆனது. காவலர்கள் எப்டியோ ஒரு வழியாக கூட்ட நெரிசலில் இருந்து அஜித் மற்றும் அவருடைய மனைவி ஷாலினியை யும் வாக்கு சாவடிக்கு உள்ளே அழைத்து சென்றனர்.

ஆனாலும் முண்டி அடித்து கொண்டு வாக்கு சாவடிக்கு உள்ளேயும் ரசிகர்கள் வந்து விட்டனர். ஒரு கட்டத்தில் காவல்துறை யின் கட்டுப்பாட்டையும் மீறி உள்ளே வந்த ரசிகர்கள் சிலர் மாஸ்க் கூட அணியாமல் அஜித் அருகே வந்து செல்ஃபி எடுக்க முயன்ற போது பொறுமை இழந்தார் அஜித். செல்ஃபி எடுக்க வந்த அந்த ரசிகரின் போனை யாரும் எதிர் பாரத வகையில் சட்டென்று பிடுங்கி வைத்து கொண்டார். அதோடு மட்டும் இல்லாமல் ரசிகர்களை பார்த்து அங்க இருந்து கிளம்பி வெளியே செல்லுமாறு உத்தரவிட்டார். அதன் பிறகு தான் கூட்டம் காவல் துறையின் கட்டுக்குள் வந்தது.

ஒரு வழியாக வாக்கு சாவடியை நெருங்கிய அஜித், அந்த ரசிகரை அழைத்து மாஸ்க் அணியுமாரு எச்சரித்து அவருடைய செல் போனை திரும்ப கொடுத்தார்.

இறுதியில் ஒரு வழியாக தனதுவாக்கை செலுத்தி விட்டு திரும்பி வரும் போது, அந்த ரசிகர்களிடம் சாரி என்று சொல்லி விட்டு தான் கிளம்பி இருக்கிறார் அஜித்.

அஜித் அவ்வாறு நடந்து கொண்டதால் தான் கூட்டம் கட்டுக்குள் வந்தது என காவல் துறை தரப்பும், வாக்கு சாவடிக்கு உள்ளே செல் ஃபோன் அனுமதி இல்லை அதனால் தான் அஜித் ஃபோனை பிடுங்கினார் என மற்றொரு தரப்பு மக்களும் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவத்தை வைத்து பல்வேறு மீம்ஸ் கள் சமூக வலைதளங்களில் வலம் வர தொடங்கி விட்டது.

எனினும், இந்த கொரோனா காலத்தில் மாஸ்க் கூட அணியாமல் செல்ஃபி எடுக்க சென்றது சரியா தவறா என்று அந்த ரசிகர் அவர் மனாட்சியுடனே கேட்கட்டும். நடிகர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்ற விழிப்புணர்வு சராசரி மக்களுக்கு என்று வருகிறதோ அன்று தான் இத்தகைய சர்ச்சைகளும் முடிவிற்கு வரும்.

Venkat Raman
venkispeaks@gmail.com

Comments

Popular posts from this blog

கழுத்தளவு தண்ணீர்

முத்து சலூனில் இருந்து நேரடி ஒளிபரப்பு

கல்லூரி முதல் திரையரங்கம் வரை