Posts

Showing posts from June, 2025

கல்லூரி முதல் திரையரங்கம் வரை

லேய், இன்னைக்கு கவிதா மேடம் பீரியட் ல ஏதோ பரீட்சை இருக்குதாம், உனக்கு தெரியுமா? என்று நண்பனிடம் கேட்டேன். ஏற்கனவே இன்னைக்கு நம்ம H.O.D பீரியட் வேற இருக்கு. இதுல இந்த பரீட்சை வேறயா, இன்னைக்கு காலேஜ் போன விளங்கிடும் என்றான் அவன். என்ன பண்றது என்று இருவரும் யோசித்து முடிப்பதற்குள் கல்லூரி பேருந்து வந்து விட்டது. இருவரும் சோகமாக பேருந்தில் ஏறினோம். நாம பேசாம காவ கிணத்து பஸ் ஸ்டான்ட் ல இறங்கிருவோம ? என்று கேட்டான் நண்பன். காவ கிணத்துல இறங்கி என்ன பண்ண? என்றேன் நான். நாகர்கோவில் போய் ஏதாவது படம் பாக்க போவோம். என்னது நாகர்கோவில் ஆ! பஸ் நம்ம ஊர் வழியாக தான போகும். கண்டிப்பா யாராவது பார்த்துவாங்க. நம்ம மாட்டிக் கிடுவோம். நம்ம ஊர் வழியா வேணாம், அஞ்சு கிராமம் வழியா வர பஸ் ல போவோம். ஆமா ல, அதுவும் சரி தான். சரி போவோம். இப்படி தொடங்கியது தான் எங்கள் திரையரங்க பயண வாழ்க்கை. நாகர்கோவில் - திரையரங்க விரும்பிகளின் சொர்க்கமா இருந்த கால கட்டம் அது. கன்னியாகுமரி மாவட்டத்தோட மொத்த சனமும் படம் பாக்கணும்னா நாகர்கோவில் தான் வரணும். ராஜேஷ், கார்த்திகை, சக்கரவர்த்தி, மினி சக்கரவர்த்தி, தங்கம், நியூ, ராஜாஸ் பிக்...