Posts

Showing posts from June, 2023

ஜன்னல் ஓரமும், கீழே விழுந்த புத்தகமும்

கடந்த 2014 ஆம் ஆண்டு பணி நிமித்தமாக எனக்கு ஜப்பான் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஜப்பான் செல்கின்றோம் என்பதை விட, முதல் முறையாக விமானத்தில் பறக்க போகிறோம் என்ற உற்சாகமே எனக்குள் மேலோங்கி இருந்தது. காலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி டெல்லி சென்று அங்கிருந்து இரவு 9.50 மணி விமானத்தில் டோக்கியோ செல்ல வேண்டும். இது தான் பயண விவரம். முந்தைய நாள் மாலையில் இருந்தே எனக்குள் ஒரு பரபரப்பு. தேவையான பொருட்கள், துணி மணிகள் என அனைத்தையும் ஒருவழியாக நண்பர்கள் உதவியுடன் தயார் செய்து விட்டேன். இது அவசர நிலையில் முடிவு செய்ய பட்ட பயணம் என்பதால் என்னை வழியனுப்ப என் தந்தை சொந்த ஊரில் இருந்து உடனடியாக கிளம்பி சென்னை வரமுடியவில்லை. எனவே என் நண்பர்கள் தான் என்னை வழியனுப்ப வந்தனர். கம்பெனியில் இருந்து அதிகாலை 3:00 மணிக்கே வண்டி அனுப்பி விட்டார்கள். ஒரு வழியாக விமான நிலையத்தை 3:30 மணிக்கெல்லாம் சென்று அடைந்து விட்டோம். அங்கு ஏற்கனவே என்னுடன் பயணம் செய்யவிருக்கும் அலுவலக நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் வந்திருந்தனர். இறுதியாக விமான நிலையத்தின் முன்பாக நின்று நண்பர்கள் உடன் சில பு...