ஒரு ரூபாயும், இரண்டு பை கருவாடும்
நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஒரு நாள் நாகர்கோவில் செட்டிகுளம் ஜங்ஷனில் இருந்து வடசேரி நோக்கி பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தேன். பேருந்து வேப்பமூடு ஜங்ஷனை கடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்தில் ஒரு சலசலப்பு. நடத்துநர் மற்றும் ஒரு பயணி இடையே நடந்த சில்லறை தகராறு அது. 11 ரூபா டிக்கெட்டுக்கு 100 ரூபா கொடுத்தா சில்லரைக்கு நான் எங்கே போவது என நடத்துநர் கேட்க, சில்லரை இருந்தா நான் கொடுக்க மாட்டேனா என அந்த பயணி பதிலளிக்க, இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் நடத்துநர், அந்த பயணியிடம் ஒரு ரூபாய் கொடு மீதி 90 ரூபாய் தருகிறேன் என்று சொல்ல, ஒரு ரூபாய் சில்லறை கூட என்கிட்ட இல்லை என்று அந்த பயணி கூற, சண்டை சூடு பிடித்தது. உடனே அருகில் இருந்த நான் சண்டையை முடித்து வைக்கும் நோக்கில் என்னிடம் இருந்த ஒரு ரூபாய் எடுத்து அந்த பயணியின் சார்பாக நடத்துநரிடம் கொடுத்தேன். ஒரு வழியாக சண்டை முடிந்தது. அந்த பயணிக்கு 30 வயது இருக்கும், நல்ல வாட்ட சட்டமாக இருந்தார். மீனவர் போல் தெரிந்தார். அந்த பயணி என்னிடம் வந்து குமரிக்கே உரித்தான தொனியில் ரொம்ப...