Posts

Showing posts from April, 2021

மரக்குரங்கு

Image
90 களின் இறுதியில் எங்கள் ஊரில் மிக பிரபலமாக இருந்த விளையாட்டு. சொல்லப்போனால் இயற்கையோடு இணைந்த விளையாட்டு அது. இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு இப்படி ஒரு விளையாட்டு இருந்தது என்று தெரிந்து இருக்க கூட வாய்ப்பில்லை. இவ்வளவு ஏன், நாங்கள் விளையாடிய அந்த நாட்களில் கூட எங்கள் ஊரை தவிர வேறு எங்கும் இந்த விளையாட்டை நான் கண்டதில்லை. எனவே இந்த விளையாட்டை பற்றி ஒரு சிறு குறிப்பாவது எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. அப்படி என்ன விளையாட்டு என்று தானே கேட்கிறீர்கள், சொல்கிறேன் அந்த விளையாட்டின் பெயர் தான் மரக்குரங்கு. இந்த விளையாட்டிற்கு குறைந்தது 5 நபராவது வேண்டும். மேலும் மிக முக்கியமாக விளையாடும் இடத்தில் ஒரு 4 அல்லது 5 மரங்களாவது இருக்க வேண்டும் அப்போது தான் இந்த விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்கும். போட்டி தொடங்குவதற்கு முன்பாக கலந்து கொண்ட நபர்களில் யார் முதலில் தொட்டு வருகிறார் என்பதனை முடிவு செய்ய வேண்டும். பெரும்பாலும் இதனை இவ்வாறு தான் முடிவு செய்வோம். அதாவது, அனைவரும் வட்டமாக நின்று கொண்டு 1,2,3 இல் இருந்து 10 வரை எண்ணி அதில் யார் இறுதியாக வருகிறார்களோ அவர் தான் தொட்டு வர வே...

செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் செல் போனை பிடுங்கிய தல?

ஒரு வழியாக பல்வேறு சலசலபிற்கிடையே தமிழ்நாடு சட்ட சபை தேர்தலுக்கான ஒட்டு பதிவு நேற்று அமைதியுடன் நிறைவு பெற்றது. எனினும், நேற்று பல்வேறு சர்ச்சைகள் கிளம்ப தான் செய்தது. அதில் ஒன்று தான், செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் செல் போனை அஜித் பிடுங்கியதாக வந்த செய்தி. என்ன தான் நடந்தது அங்கே ? ரசிகர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டி முதல் ஆளாக தனது வாக்கு சாவடிக்கு வருகை தந்தார் நடிகர் அஜித். எனினும், அவரை காண அங்கே ரசிகர்கள் காலை முதலே கூடிய வண்ணம் இருந்தனர். அஜித் காரை விட்டு இறங்கியது தான் தாமதம் உடனே ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்கவும், வீடியோ எடுக்கவும் என அந்த இடமே பரபரப்பு ஆனது. காவலர்கள் எப்டியோ ஒரு வழியாக கூட்ட நெரிசலில் இருந்து அஜித் மற்றும் அவருடைய மனைவி ஷாலினியை யும் வாக்கு சாவடிக்கு உள்ளே அழைத்து சென்றனர். ஆனாலும் முண்டி அடித்து கொண்டு வாக்கு சாவடிக்கு உள்ளேயும் ரசிகர்கள் வந்து விட்டனர். ஒரு கட்டத்தில் காவல்துறை யின் கட்டுப்பாட்டையும் மீறி உள்ளே வந்த ரசிகர்கள் சிலர் மாஸ்க் கூட அணியாமல் அஜித் அருகே வந்து செல்ஃபி எடுக்க முயன்ற போது பொறுமை இழந்தார் அஜித். செல்ஃபி எடுக்க ...