Posts

கல்லூரி முதல் திரையரங்கம் வரை

லேய், இன்னைக்கு கவிதா மேடம் பீரியட் ல ஏதோ பரீட்சை இருக்குதாம், உனக்கு தெரியுமா? என்று நண்பனிடம் கேட்டேன். ஏற்கனவே இன்னைக்கு நம்ம H.O.D பீரியட் வேற இருக்கு. இதுல இந்த பரீட்சை வேறயா, இன்னைக்கு காலேஜ் போன விளங்கிடும் என்றான் அவன். என்ன பண்றது என்று இருவரும் யோசித்து முடிப்பதற்குள் கல்லூரி பேருந்து வந்து விட்டது. இருவரும் சோகமாக பேருந்தில் ஏறினோம். நாம பேசாம காவ கிணத்து பஸ் ஸ்டான்ட் ல இறங்கிருவோம ? என்று கேட்டான் நண்பன். காவ கிணத்துல இறங்கி என்ன பண்ண? என்றேன் நான். நாகர்கோவில் போய் ஏதாவது படம் பாக்க போவோம். என்னது நாகர்கோவில் ஆ! பஸ் நம்ம ஊர் வழியாக தான போகும். கண்டிப்பா யாராவது பார்த்துவாங்க. நம்ம மாட்டிக் கிடுவோம். நம்ம ஊர் வழியா வேணாம், அஞ்சு கிராமம் வழியா வர பஸ் ல போவோம். ஆமா ல, அதுவும் சரி தான். சரி போவோம். இப்படி தொடங்கியது தான் எங்கள் திரையரங்க பயண வாழ்க்கை. நாகர்கோவில் - திரையரங்க விரும்பிகளின் சொர்க்கமா இருந்த கால கட்டம் அது. கன்னியாகுமரி மாவட்டத்தோட மொத்த சனமும் படம் பாக்கணும்னா நாகர்கோவில் தான் வரணும். ராஜேஷ், கார்த்திகை, சக்கரவர்த்தி, மினி சக்கரவர்த்தி, தங்கம், நியூ, ராஜாஸ் பிக்...

கழுத்தளவு தண்ணீர்

லேய், இன்னைக்கு மத்தியாணம் செம்பிராம்பூர் ( செண்பகராமன்புதூர் ) ஆத்துக்கு குளிக்க போவோமா? என்று நண்பனிடம் கேட்டேன். யாரெல்லாம்? என்று கேட்டான் அவன். நீ, நான், வேற நம்ம பயலுவ எவன் லாம் வரேனு சொல்ரானோ அவனுவலயும் கூட்டிட்டு போவோம். ஆனா நம்ம ரெண்டு பேருகிட்ட மட்டும் தானே சைக்கிள் இருக்கு? அதுனால என்ன நம்ம முப்பில்ஸ் போவோம் என்றேன் நான். முப்பில்ஸ் ஆ! அவ்ளோ தூரம் மூணு பேர வச்சுட்டு எவன்ல சைக்கிள் சவுட்டுவான்? லே! உனக்கு தெரியாதா நா நல்ல முப்பில்ஸ் ஓட்டுவன்னு. போன வாரம், நம்ம வடக்கூர் பயலுக கூட சேர்ந்து நான் பொய்கை அணைக் கட்டுக்கே முப்பில்ஸ்ல தான் போயிட்டு வந்தேன். லே, இந்த சவுடால லாம் என்கிட்ட உடாத மக்கா. லே, சத்தியமால. வேணும்னா வடக்கூர் பயலுவ கிட்ட கேட்டு பாரு. போல! உன்னை பத்தி எனக்கு தெரியாதா நா நம்ப மாட்டேன் என்றான் அவன் ஒரு சிறிய நமட்டு சிரிப்புடன். சரி சரி, நீ வீட்ல போய் சோறு தின்னுட்டு, உன் சைக்கிள் எடுத்துகிட்டு டக்கர் ஸ்டான்ட் கிட்ட வந்திரு. பயலுவலயும் அங்கேயே வர சொல்லிடு. நம்ம அங்க இருந்து ஒன்னா சேர்ந்து போவோம். செம்பிராம்பூர் ஆத்துல குளிச்சு ரொம்ப நாள் ஆச்சு. எப்படியாவது இன்னைக்கு...